ஹபீஸ் சையத்தின் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் தேடப்படும் தீவிரவாதியான ஹஃபீஸ் சயீத், பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான புகாரில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் அவரை விடுவிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது ஜமாத் உத் தாவா என்ற தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமாக விளங்கும் மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பதிவு செய்ய ஹபீஸ் சையத் விண்ணப்பித்தார்.

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இயக்கம் என்பதால், அவரது மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன