Advertisement
Advertisement

‘ஹபீஸ் சயீத் விடுதலை- பாக். உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை பாகிஸ்தானின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஹஃபீஸ் சயீதின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கும் பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை நிராகரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹஃபீஸ் சயீது வீட்டுக்காவலில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இது உலகநாடுகளை ஏமாற்றும் பாகிஸ்தானின் நாடகம் என்றார்.

ஐ.நா. சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர், சுதந்திரமாக சுற்ற அனுமதிக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் கொள்கையில் இருந்து பாகிஸ்தான் மாறவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன