ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்து – தந்தை, மகன் பலி

திண்டுக்கல் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், தந்தை மகன் உயிரிழந்தனர்.

வேடசந்தூர் முத்தினாபுரத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்காதர் தனது குடும்பத்தினருடன் ஷேர் ஆட்டோவில், தாமரைப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கல்லாறு அருகே வந்தபோது, சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது.

இதில் சேக் அப்துல் காதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் முகமது மீரான் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சேக் அப்துல்லாவின் மனைவி மற்றும் மகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவர்களது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!