Advertisement

வைகை ஆற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

வைகை ஆற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், வைகை ஆறு தூய்மை பணிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 32 லட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வைகை ஆற்றை பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன