வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பாடத்திட்டம் – செங்கோட்டையன்

மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கரூரில் 45வது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளும் கணிணி மயமாக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன