Advertisement
Advertisement

வேலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வேண்டாவெறுப்பாக பங்கேற்ற அதிகாரிகள்

வேலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் குறைகளை முன்வைத்துக் கொண்டிருக்க, அரசு அதிகாரிகளோ செல்போன்களில் மூழ்கிக்கிடந்த அவலம் அரங்கேறியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிலுவைத்தொகை வழங்காதது, வங்கி அதிகாரிகளின் அடாவடி கடன் வசூல் நடவடிக்கைகள் என விவசாயிகள் தங்கள் குறைகளை கண்ணீருடன் முறையிட்டனர்.

ஆனால், அதிகாரிகளோ இவற்றையெல்லாம் செவிமடுக்காமல், தங்கள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் சாட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

குறைகளைத் தீர்க்க வேண்டிய அதிகாரிகள், அவற்றை காதுகொடுத்து கேட்கக்கூட முன்வரவில்லை என விவசாயிகள் வேதனையடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன