வேன் ஓட்டுநர்களுக்கு புதிய சங்கம் அமைக்க எதிர்ப்பு

சென்னை புழல் அருகே புதிய வேன் ஓட்டுநர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டிருந்த போது தீக்குளிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புழல் கேம்ப் அருகே புதிய வேன் ஓட்டுநர்கள் சங்க திறப்பு விழாவுக்கு அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரியும் வேன் ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்க திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் புழல் கேம்ப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒட்டுநர் ஒருவர், பெட்ரோலை தலையில் உற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரை விடுவிக்க கோரி மற்றொரு நபரும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் கைது செய்தனர். சங்கப் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிய போலீசார், அதுவரை சங்கம் அமைக்க அனுமதியில்லை என்று கூறிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!