Advertisement

வேதாரண்யத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் OS மணியன் ஆறுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரைத் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தை அமாவாசையையொட்டிக் கடலில் குளித்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பிரவீன்குமார், பரத், யுகேந்திரன், கனிஷ்கர், ராஜமணி ஆகிய 5பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 5பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி வழங்கினார். வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 இளைஞர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன