Advertisement

வெளிநாட்டுக் கல்வியை விரும்பும் இந்திய பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்பும் இந்தியப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 47 சதவீதமாக இருந்த இத்தகைய பெற்றோரின் எண்ணிக்கை, தற்போது 62 சதவீதமாக அதிகரித்திருப்பது ஹெச்எஸ்பிசி (HSBC) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக் கல்வியில் ஆர்வம் காட்டும் முதல் 15 நாடுகளில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைப்பதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பாதிப்பேருக்கும் மேல், தங்களது பிள்ளைகள் அமெரிக்கா சென்று படிப்பதையே விரும்புவதும் தெரிய வந்துள்ளது. சீனா, தைவான், கனடா நாடுகளில் உள்ள பெற்றோரும் வெளிநாட்டுக் கல்வியில் ஆர்வம் காட்டுவதில் முன்னணி வகிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன