வெப்பசலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 2 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன