வெங்கையா நாயுடு கடந்த வந்த பாதை

அரசியல் வாழ்வில் படிப்படியாக ஏறி உச்சத்தை தொட்டவர்கள் வரிசையில் இருப்பவர், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு. அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சாவெட்டாபாலம் என்ற ஊரில் 1949ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார் வெங்கையா நாயுடு… பள்ளி, கல்லூரி படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் முடித்த அவர், விசாகப்பட்டினம் சென்று, சட்டப்பல்கலைகழகத்தில், சட்டம் பயின்றார். முதலில் ஆர்எஸ்எஸ்-ல் தன்னை இணைத்துக் கொண்ட வெங்கையா நாயுடு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பிலும் இணைந்தார்.

1972ஆம் ஆண்டு ஜெய் ஆந்திரா என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தில் இனைந்து சிறப்பாக பணியாற்றி பங்களிப்பை நல்கியதால், கவனிக்கப்படும் நபராக உயர்ந்தார். நெல்லூர் மாவட்டம் உதயகிரி தொகுதியில் இருந்து 1978, 1983 ஆகிய ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டு, வாஜ்பாய் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார்.

2002ஆம் ஆண்டு பா.ஜ.க. தலைவரான வெங்கைய நாயுடு, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து,அப்பதவியிலிருந்து விலகினார். 1998, 2004, 2010 என மூன்று முறை கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!