வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபுரத்தை சேர்ந்த வேளாண்மை துறை அதிகாரி செல்வப்பிரபு வீட்டில், சனிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர் பீரோவை உடைத்து, 15 சவரன் நகை மற்றம் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். பின்னர், செல்வப்பிரபுவின் ஆடைகளை அணிந்து கொண்டு, அருகே உள்ள மற்றொரு வீட்டில் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த மின்விசிறியை எடுத்து சென்றார். இந்த சம்பவம் அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!