Advertisement
Advertisement

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்துக் கொள்ளை

சென்னை பெரவள்ளுரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து 8 சவரன் தங்க நகைகளை பறித்த கொள்ளையனை 10 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

பெரவள்ளுர் லோக்கோ ஸ்கீம் ரோடு 2வது குறுக்கு தெருவை சேர்ந்த ரயில்வே ஊழியரான குணசேகரன், அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று குணசேகரன் பணிக்கு சென்று விட்ட நிலையில் கஸ்தூரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மாலை சாமி கும்பிடுவதற்காக கஸ்தூரி வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு பூஜை அறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் புகுந்த முகமூடி அணிந்த மர்மநபர், கஸ்தூரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அனிந்திருந்த 6 சவரண் தங்க நகைகளை பறித்துள்ளான். கஸ்தூரி காதில் அணிந்திருந்த கம்மலை காதோடு அறுத்த கொள்ளையன் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினான். கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் கஸ்தூரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவனைக் கைது செய்து, 8 சவரண் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, உயரதிகாரிகள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன