விளையாட்டு மைதானம் இல்லை; ஆனால், அமைத்ததாக கூறி கையாடல் – ஊராட்சி முன்னாள் தலைவர் மீது வழக்கு

விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி பணம் கையாடல் செய்த ஊராட்சி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சிவகங்கை ஆட்சியர், துணை ஆட்சியர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேவப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த மனுவில், 2006 முதல் 2011 வரையிலும், 2011 முதல் 2016 வரையிலும், தேவப்பட்டு கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாகவும், ஊரணியில் முள்வேலி அமைக்கப்பட்டதாகவும், விளையாட்டு மைதானம் அமைத்ததாகவும் கூறி, ஊராட்சி தலைவராக இருந்த கலாவதி நாராயணன் என்பவர் பல லட்ச ரூபாய் கையாடல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு, சிவகங்கை ஆட்சியர், ஊராட்சி பிரிவிற்கான துணை ஆட்சியர், திட்ட மேம்பாட்டு அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன