விளையாடச் சென்ற சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை அண்ணாநகர் பகுதியில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை ராணி அண்ணாநகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரின் மகன் அம்ரீத் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மயங்கி விழுந்துள்ளான்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அம்ரீத் நேற்று உயிரிழந்தான். சிறுவன் உடலில் காயம்பட்ட தடங்கள் இருந்ததால், அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ராணி அண்ணாநகர் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!