விருதுநகர் மீன் மார்க்கெட் கடைகளில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. நகரின் மையப்பகுதியில் உள்ள தேசபந்து மைதானம் அருகே மீன் மார்க்கெட் உள்ளது.

இந்த மீன் மார்க்கெட்டில் பழக்கடை , மண்பானைகள் கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அங்கு ஒரு கடையில் திடீரெனப் பற்றிய தீ, அருகில் இருந்த கடைகளுக்கும் மளமளவெனப் பரவியது. தகவல் அறிந்த தும் விருதுநகர் தீயணைப்பு நிலைய வாகனங்கள் விரைந்து வந்து பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!