Advertisement

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகைகள் பறிப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், 70 வயது மூதாட்டியிடம் 4 சவரன் நகைகளை வாங்கிச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

குரண்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள், கடந்த திங்களன்று காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வந்தார்.

அவருக்கு உதவுவதாகக் கூறி அணுகிய பெண் ஒருவர், மயக்கப்பொடி தூவி, தண்டட்டி, மூக்குத்தி உள்ளிட்ட 4 சவரன் நகைகளை வாங்கிச் சென்றுவிட்டதாக காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். மருத்துவமனையின் சி.சி.டி.வி.

கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் மூதாட்டிக்கு வழிகாட்டியது, நகைகளை வாங்கியது ஆகிய காட்சிகள் பதிவாகியிருந்தன.

கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, நகைகளை வாங்கிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன