Advertisement

வியாபாரியை வழிமறித்து 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

சென்னையில் வெள்ளி வியாபாரியை வழிமறித்து 12 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சவுகார்பேட்டை தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான கிஷோர், நேற்று வேலூர் சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் சென்னை திரும்பியுள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சவுகார்பேட்டை வந்தவரை, துளசிங்கம் தெருவில் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

கிஷோரை வழிமறித்த கும்பல், அவரிடமிருந்து 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்து கிஷோர் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய கொள்ளையர்களை யானைக்கவுனி குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன