வியட்நாமை தாக்கிய சக்திவாய்ந்த் டாலஸ் புயல்

வியட்நாம் நாட்டில் டாலஸ் புயல் வீசியதால் ஏற்பட்ட பாதிப்பில், 14 பேர் உயிரிழந்தனர்.

சக்திவாய்ந்த டாலஸ் புயல், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றின் காரணமாக, மரங்கள் பிடுங்கி எறியப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. கொட்டித் தீர்த்த மழையால் Nghe An உள்ளிட்ட வடக்கு மாகாணங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் மிதக்கின்றன. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். மோசமான வானிலையால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. டாலஸ் புயல் பாதிப்புகளில் 14 பேர் பலியானதாகத் தெரிவித்துள்ள வியட்நாம் அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன