விமானப் படையின் முன்னாள் மார்ஷல் உடலுக்கு மரியாதை

மாரடைப்பால் காலமான இந்திய விமானப் படையின் முன்னாள் மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர், மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

இந்திய விமானப் படையில் பணிபுரிந்த அர்ஜன் சிங்குக்கு வயது 98. 1965ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் முக்கிய பங்காற்றிய அர்ஜன் சிங், 5 நட்சத்திரம் பெற்ற ஒரே இந்திய மார்ஷல் ஆவார். மாரடைப்பால் டெல்லியில் அவர் நேற்று காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அர்ஜன் சிங்கின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதிகளும் அர்ஜன் சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!