விமானப் படைத் தளத்தில் சுவர் ஏறி குதித்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டனர்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் ஊடுருவ முயன்ற ஒருவரை போலீசார் சுட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய விமானப்படையின் உயரதிகாரிகள் காயம் அடைந்த நபரின் பெயர் சுஜித் என்றும் அவர் அங்குள்ள ஆனந்த விகார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் நபர் என்றும் தெரிவித்தனர். அந்த நபர் தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவரா அல்லது விபரீதம் புரியாமல் விமானப்படையின் சுவர் ஏறி குதித்தாரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதும் விமானப் படைத்தளத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன