விபத்தில் சிக்கிய லாரியில் செல்போன்கள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை கைது

சேலத்தில் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இருந்து கோவை சென்ற பார்சல் லாரி, சேலம் அருகே குமரகிரி பகுதியில் விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த எச்.டி.சி, சாம்சங், ஜியோனி செல்போன்கள் என மொத்தம் 170 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், செல்போன்களை திருடிச் சென்ற, சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், தங்கராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட செல்போன்கள் ஐஎம்இஐ எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன