விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழகம் ஐந்தாவது முறையாக சாம்பியன்

விஜய் ஹசாரே கோப்பையை 5-வது முறையாக வென்று, தமிழக கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 25-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப்போட்டியின் இறுதிப்போட்டி,டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மேற்கு வங்க அணியை, தமிழக அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சங்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தமிழக அணியின் வீரர் திணேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 112 ரன்கள் குவித்தார். 47 புள்ளி 2 ஓவர்களில் தமிழக அணி 217 ரன்கள் சேர்த்து அல்அவுட் ஆனது.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு வங்க அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதீப் சேட்டர்ஜி 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில், 180 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கு வங்க அணி இழந்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தமிழக அணி, விஜய் ஹசாரே கோப்பையைக் கைப்பற்றியது.
தமிழக அணி தரப்பில் முஹமது, அஷ்வின் கிறிஸ்ட், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழக அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன