விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட பிரதமர் மோடி அரசு மும்முரம்

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அண்மையில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், சட்டிஸ்கர் முதலமைச்சர் ரமன் சிங், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் கமாண்டோப் படை பாதுகாப்பு திரும்பப்பெறப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமாயி உள்பட 475 பிரமுகர்களுக்கு தற்போது சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!