வாய்தா கேட்பதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளக்கூடாது, தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

வழக்குறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு தயாராக வரவேண்டும் என்றும், வாய்தா கேட்பதை வாடிக்கையாக்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1862ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு இன்றோடு 125 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான விழா, உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கவுல், பானுமதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும், உயர்நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!