வளர்ப்பு மகளையே பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் குர்மீத்

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், தனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக, தேரா சச்சா சவுதா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹனிபிரீத்தை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து, தனக்கு நம்பகமான உதவியாளராக வைத்திருந்த சாமியார் குர்மீத், அவரையே தனது ரகசிய அறையில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹனிபிரீத்தும், ஆசிரமத்தில் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும், சாமியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹனிபிரீத்திடம் இருந்து விவாகரத்து கோரிய அவரது கணவர், சாமியாருடன் தனது மனைவி ஒரே படுக்கையில் இருந்ததை தான் பார்த்ததாக கூறிய நிலையில், தற்போது சாமியாரின் ஆதரவாளர்கள் கூறியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன