Advertisement

தோவாளைச் சந்தையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த மல்லிகைப்பூ விலை

கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தோவாளைச் சந்தையில், மல்லிகைப் பூ விலை வரலாறு காணாத அளவுக்கு கிலோ 4 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பூச்சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ளது. இங்கு தமிழக மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலப் பகுதிகளில் இருந்தும் மல்லி, பிச்சி, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட ஏராளமான மலர்கள் விற்பனைக்கு வருகின்றன. கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தோவாளை பூச்சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கிலோ 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்கப்படும் மல்லிகைப்பூ, நேற்று கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று மல்லிகைப்பூவின் விலை கிலோ 4 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் வர உள்ள நிலையில் மல்லிகைப் பூ விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/edit?o=U&video_id=YO2Pc-j7l1k

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன