Advertisement
Advertisement

வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்து எரித்த கொடூர கணவன்

கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்துக் கொலை செய்து உடலை எரித்த கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டத்தை அடுத்த வேங்கோடு பகுதியை சேர்ந்த சீமானுக்கும், ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சாலினி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தன்று சாலினியின் குடும்பத்தினர் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, மற்றும் பணத்தை வரதட்சனையாக கொடுத்துள்ளனர். ஆனாலும் கடந்த சில நாட்களாக சீமான் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சாலினியிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கணவன் சீமான், சாலினியை 4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் இரும்பு கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். மயங்கிய சாலினியை இழுத்துச் சென்று கேஸ் சிலிண்டரின் குழாயை சாலினியின் உடல் மீது வைத்து, தீவைத்துள்ளார். இதில் உடலில் தீ பரவிய சாலினி, மயக்க நிலையிலேயே உயிரிழந்தார்.

வீட்லிருந்து புகை வருவதைக் கண்ட அருகிலிருந்தோர் அளித்த தகவலையடுத்து அங்கு போலீசார் சென்றனர். அவர்கள் வருவதைக் கண்ட சீமான் தூக்குபோட்டு தற்கொலை நாடகம் ஆடியுள்ளார். சாலினியை எரித்துபோது சீமோனின் கைகளில் காயமும் ஏற்பட்டதுள்ளது. இதையடுத்து சீமோனை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன