Advertisement

வடகொரிய வீரர் உடைந்து ஒட்டவைக்க முடியாத ஜாடி போல இருந்தார் – தென்கொரிய மருத்துவர்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த அந்நாட்டு ராணுவ வீரர் உடைந்து ஒட்டவைக்க முடியாத ஜாடி போல இருந்ததாக தென்கொரிய மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பி வந்த வடகொரிய ராணுவ வீரர் ஹோ ச்சாங் சாங்கை ((Oh Chong Song)) சகநாட்டு வீரர்களே துரத்தி துரத்தி சரமாரியாகச் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த நிலையில் தென்கொரிய எல்லைப் பகுதிக்குள் விழுந்த அவரை தென்கொரிய ராணுவத்தினர் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடுவதைப் போல இருந்த ஹோ ச்சாங்கின் உடலில் இருந்த குண்டுகளையும், வெள்ளை நிறப் புழுக்களையும் அகற்ற 6 மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர் லீ குக் ஜாங் ((Lee Cook-Jong)) தெரிவித்துள்ளார். இறந்துவிடுவார் என அஞ்சப்பட்ட ஹோ சாங் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாகத் தெரிவித்துள்ள மருத்துவர், எனினும் சுதந்திரத்துக்காக ஹோ ச்சாங் கொடுத்த விலை மிக அதிகம் என்று கூறியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன