Advertisement

வங்கிக்குப் பணம் எடுத்துச்சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், 2 பாதுகாவலர்கள் பலி

ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் வங்கிக்குப் பணம் எடுத்துச் சென்ற வாகனத்தின் பாதுகாவலர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரால்சாக் என்னுமிடத்தில் ஜம்முகாஷ்மீர் வங்கிக் கிளைகளுக்குப் பணம் எடுத்துச் சென்ற ஒரு வாகனத்தின் மீது ஆயுதமேந்திய தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்துக் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் இருவரையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டுப் பெட்டிகளில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழிப்பறிக் கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன