வங்கக் கடலில் இறுதி கட்டத்தை எட்டிய மலபார் கூட்டுப்பயிற்சி

வங்கக் கடலில் அமெரிக்க ஜப்பான் நாடுகளோடு இந்தியக் கடற்படை மேற்கொள்ளும் மலபார் கூட்டுப் பயிற்சி இறுதிகட்டத்தை எட்டியது.

1992 முதல் இந்தியாவும், அமெரிக்காவும் நடத்திய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் ஜப்பானும் இணைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் போர்ப்பயிற்சி இந்த ஆண்டு இந்தியாவின் வங்கக் கடலில் நடக்கிறது.

கடந்த 7-ம் தேதி சென்னை துறைமுகத்தில் தொடங்கிய பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் அதிநவீன போர் தளவாடங்கள் ஏந்திய போர்க்கப்பல்கள் ஈடுபட்டன. 11-வது நாளாக நடந்த இறுதிகட்டப் பயிற்சியில் 3 நாடுகளுடைய கப்பல்களில் உள்ள போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. சீனாவும், இந்தியாவுக்கிடையே எல்லைப்பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், இரண்டு சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியா பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன