வகுப்பிற்கு ஆசிரியர்கள் வருவதில்லை என A.E.M. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் போராட்டம்

சென்னை கொருக்குப்பேட்டையில் A.E.M. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை எனக் கூறி 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர்.

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகரில் உள்ள A.E.M. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சுமார் ஆயிரத்து 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கபட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கொட்டும் மழையில் பெற்றோர்களும், மாணவ மாணவியர்களும் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன