Advertisement

லாபத்தில் இயங்காத எட்டு ரயில்களை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மம்தா கடும் எதிர்ப்பு

லாபத்தில் இயங்காத எட்டு ரயில்களை ரத்து செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசுக்கு கிழக்கு ரயில்வே வர்த்தக மேலாளர் எழுதிய கடிதத்தில், நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை தொடர்ந்து இயக்க வேண்டுமெனில், இழப்புத்தொகையில் பாதியை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ரயில்வேத்துறை சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முந்தைய அரசு வாங்கிய கடனுக்காக ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசு பெற்றுவருவதாகவும், அதே நேரத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன