லண்டன் ரயில் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இரண்டாவதாக 21 வயது நபர் கைது

லண்டன் ரயில் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இரண்டாவதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்சன்ஸ் கிரீன் ரயில்நிலையம் அருகே ரயிலில் வெடித்த பக்கெட் வெடிகுண்டால் 30 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு சரிவர வெடிக்காததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதில் தொடர்புடையதாகக் கருதி ஏற்கெனவே 18 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், லண்டன் ஹவுன்ஸ்லோ பகுதியில் 21 வயதான ஒருவரைக் கைது செய்த போலீசார் அவன் தங்கியிருந்த இடத்தில் தடயங்கள் கிடைக்கிறதா என சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் பிரிட்டனின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன