ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மியான்மரின் பூர்வகுடி மக்கள் இல்லை – மியான்மர் ராணுவ தளபதி

ரோஹிங்யா இஸ்லாமியர் மியான்மரின் பூர்வகுடி மக்கள் இல்லை என மியான்மர் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மியான்மருக்கான அமெரிக்க தூதர் (Scot Marciel) ஸ்காட் மார்சியல்-ஐ சந்தித்தபோது இவ்வாறு விளக்கமளித்ததாக மியான்மர் ராணுவ தளபதி (Min Aung Hlaing) மின்-ஆங்-லெய்ங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மியான்மரின் பூர்வ குடிமக்கள் இல்லை என்றும் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மியான்மருக்கு வந்த வங்காளிகள் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் வங்காளிகள் என்பதால் சொந்த இடமான வங்கதேசத்தில் பாதுகாப்பாக இருக்கலாம் என அடைக்கலம் தேடி சென்றுவிட்டதாகவும், ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகள் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மியான்மர் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன