Advertisement
Advertisement

ரெப்கோ வங்கியில் கொள்ளை முயற்சி

திருவள்ளூரில் உள்ள ரெப்கோ வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஜவஹர் லால் நேரு தெருவில் உள்ள ரெப்கோ வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான பிரிவும், கணக்குகள் மற்றும் பணம் சேமிப்புக்கு அதன் அருகிலேயே மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.

இதில் நேற்றிரவு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி அளிக்கும் பிரிவு அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்று கொள்ள அடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் பணம் முழுவதும் அதன் அருகில் உள்ள பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன