Advertisement

ரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்

கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, விருதுநகர் காவல்துறையினர், 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

விருதுநகர் சூலக்கரை போலீசார், கடந்த 16ஆம் தேதி சாத்தூரை சேர்ந்த சேதுராமன், கயத்தாறு கொம்பையா ஆகியோர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்து, பத்தரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு சமத்துவபுரத்தைசே சேர்ந்த விக்னேஷ், தன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 54 லட்சத்து, 57 ஆயிரத்து நாற்பது ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம், 500, 200, நூறு ஆகிய மதிப்புடையை கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, பிரிண்டர்கள், பேப்பர்களையும் போலீசார் கைப்பற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன