Advertisement

ரூ.2,000 வரை டெபிட் கார்டு கட்டணங்களுக்கு கூடுதல் தொகை ரத்து

debit card எனப்படும் வங்கிக் கணக்கு அட்டையைப் பயன்படுத்தி இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தினால், வணிகர் கழிவுத்தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். பொதுவாக டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது எம்.டி.ஆர் தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில், 2 ஆயிரம் ரூபாய் வரையிலான சிறிய கட்டணங்களுக்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

வங்கிகளுக்கு இந்த கட்டணத்தை மத்திய அரசே திருப்பித் தந்துவிடும். இதனால் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன