ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தூப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 3 கடல் மைல் தொலைவில், இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படையினர் சுட்டதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி வற்புறுத்தி, அடித்து துன்புறுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையினரைக் கண்டித்து, இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன