Advertisement

ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் 500 மீட்டர் அளவுக்கு உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் 500 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது. பாம்பன், தெற்குவாடி, சின்னபாலம், தோணித்துறை உள்ளிட்ட பகுதிகளில் காலை வழக்கத்திற்கு மாறாக கடல் 500 மீட்டர் வரையில் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் மணலில் சிக்கின. அண்மைக் காலமாக சின்னபாலம் கடற்கரை, மண்டபம், தோணித்துறை கடற்கரையில் கடல் உள்வாங்குவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன