ராணுவத் தலைமைத் தளபதிக்கு அமெரிக்கா ஏன் பயணத் தடை விதித்தது என இந்தோனேஷியா கேள்வி

தங்கள் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதிக்கு அமெரிக்கா ஏன் பயணத் தடை விதித்தது என இந்தோனேஷியா கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி அழைப்பின் பேரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்க இந்தோனேஷிய ராணுவத் தலைமைத் தளபதி கடோட் நுர்மன்ட்யோ (Gatot Nurmantyo), அமெரிக்கா செல்வதற்காக தமது மனைவியுடன் எமிரேட்ஸ் விமானத்தில் ஏறினார். அப்போது அமெரிக்க குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை உத்தரவின் பேரில், அவர்களுக்கு அனுமதியில்லை எனக் கூறி எமிரேட்ஸ் விமான நிறுவனம் அவர்களை கீழே இறக்கியது. அப்போது கடோட்-டிடம் விஸா, கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் அனைத்தும் இருந்தபோதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்தோனேஷியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இச்சம்பவத்துக்கு அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரியபோதும் அவர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வரும் கடோட்-ஐ வரவேற்கக் காத்திருப்பதாக அமெரிக்க தூதரகத்தில் இருந்து தகவல் வந்தபோதும், தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தோனேஷியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன