ராஞ்சியிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் அவசர தரையிறக்கம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவைகள் மோதியதை அடுத்து, அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. டெல்லி புறப்பட்ட ஏர்ஏசியா விமானத்தின் பக்கவாட்டு பகுதியில் பறவைகள் மோதியதால், டர்பைன் பிளேடுகள் சேதமடைந்து எஞ்சினிலிருந்து புகை வெளியேறியது. அதன் பின்னும் விமானத்தை இயக்குவது ஆபத்து என அறிந்த பைலட் விமானத்தை மீண்டும் ராஞ்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!