ராசிபுரம் அருகே சிலிண்டர் கசிவால் இறைச்சிக் கடையில் திடீர் தீ விபத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இறைச்சிக் கடையில் தீப்பிடித்ததால், எரிவாயு சிலிண்டர் வெடித்து விடுமென்ற அச்சத்தில் மக்கள் சிதறி ஓடினர். காக்காவேரி சாலையில் உள்ள அந்தக் கடையில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததில் மேஜை, நாற்காலிகள், தள்ளுவண்டி, நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த கூரையும் தீப்பற்றி எரிந்தது.

எரிவாயு சிலிண்டர் வெடித்து விடுமென்ற அச்சத்தில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக தீயை அணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன