ராகுலை கிண்டலடிக்கும் பப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த தடை

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பப்பு (Pappu) என்ற வார்த்தையை மாநில பா ஜ க வினர் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சிறுவன் என பொருள்படும் பப்பு என்ற வார்த்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் பிரச்சார விளம்பரங்களில் குஜராத் பா ஜ க வினர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. குஜராத் பி ஜே பி யின் தேர்தல் பிரச்சார விளம்பர வாசகங்கள் அடங்கிய கோப்புகள் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் அனுப்பப்பட்டது. குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான ஊடகக் குழுவினர் பப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அதை மாற்றவோ அல்லது நீக்கவோ பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பப்பு என்ற வார்த்தையை அம்மாநில பா ஜ க வினர் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன