Advertisement

ரஷ்ய பகுதிகளில் -67 டிகிரி செல்சியஸ் குளிர் – கண் இமைகள் கூட பனியால் சூழப்படும் அளவுக்கு பருவநிலை

ரஷ்யாவில், கண் இமைகள் கூட பனியால் சூழப்படும் அளவுக்கு, மைனஸ் 67 டிகிரி செல்சியஸ் பருவநிலை நிலவுகிறது. ரஷ்யாவில் பனிப்பொழிவு புதிதல்ல என்றாலும் தற்போது நிலவி வரும் பனியால் மக்கள் தவித்து வருகின்றனர். சகா குடியரசு ((sakha)) பகுதிகளில் பனி மூடி காணப்படுகிறது. மக்கள் வசிக்கும் மிக குளிரான இடமாக கருதப்படும் ஓய்மியாகன் ((oymyakon)) கிராமம் முடங்கிப் போனது.

கார் பழுதாகி நின்றதால் நடந்தே வீட்டிற்கு சென்ற 2 பேர், கடும் குளிரால் உடல் நடுங்கி வழியிலேயே உயிரிழந்தனர். வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலையில், செல்பி மோகம் கொண்டவர்கள் ஆபத்தை உணராமல் வெகுநேரம் வெளியில் சுற்றித் திரிகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன