Advertisement

ரயில்வே பாதுகாப்பு அம்சங்களுக்கு ரூ. 12000 கோடியில் திட்டம் – ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

ரயில்வே துறையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக, 12000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவது, தீப்பற்றுவது உள்ளிட்ட அசம்பாவிதங்களிலிருந்து தடுக்கும்வகையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிக்னல் கோளாறுகளை முன்கூட்டியே அறிவிக்க ஐரோப்பிய ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறையை நிர்மானிக்கும் பணிகள் ஏற்கனவே துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு அம்சத்தை ஒன்பதாயிரத்து 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவுபடுத்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளை செய்து முடிக்க 12000 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன