ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களும், அந்தத் துறை சார்ந்த துணை மானியக் கோரிக்கைகளும் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேறின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன