ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகை

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு, தூய்மை இந்தியா திட்டம் குறித்து வலியுறுத்தி பேசினார்.

பிரதமரின் பிறந்தநாளை பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் சேவைப் பணிகள் செய்து கொண்டாடுவதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மரக்கன்றுகள், மருத்துவ முகாம்கள், தூய்மை பணிகள் போன்றவற்றை நடத்தி வருவதாகக் கூறிய அவர், ரத்த தானம் செய்பவர்களையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியின் போது மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன