ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்றிய போலீஸ்காரர்

சென்னை எழும்பூரில் ரயிலில் இருந்து தவறி உயிருக்கு போராடிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய போலிசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் நின்றவாறு பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட அவர், ரயிலில் இருந்து பிடியை விடாமல், பிளாட்பார்முக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்கார் சண்முகம், உடனடியாக விரைந்து வந்து, சமயோஜிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை ரயிலில் இருந்து கீழே இழுத்து உயிரை காப்பாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!