Advertisement

ரயான் பள்ளி கொலை வழக்கு:கொலை செய்த சிறுவனும், கொலையுண்ட சிறுவனும் முன்பே பழக்கமானவர்கள்

டெல்லி ரயான் பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவனும், அவனைக் கொன்ற 11ம் வகுப்பு மாணவனும் 2 வருடங்களாக ஒரே பியானோ பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவன், குடும்ப பிரச்சனை காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி நடைபெற இருந்த தேர்வை நிறுத்த சிறுவன் ப்ரத்யுமானை கழிவறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையை திட்டமிட்டே செய்ததாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மாணவன், ப்ரத்யுமானை 2 வருடமாக தெரியும் எனவும் தெரிவித்துள்ளான். கைது செய்யப்பட்ட மாணவன் சிறுவன் என்பதால் பாதுகாப்பு காரணமாக ஃப்ரீதாபாத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவனை தங்கவைத்துள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததே தனக்கு படிப்பில் ஆர்வம் குறைய காரணம் என்று கைது செய்யப்பட்ட மாணவன் கூறியதால், அவனுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன